உலக இயன்மருத்துவ தினத்தை முன்னிட்டு (06/09/2024) மானிப்பாய், IMS இன் நரம்பியல் புனர்வாழ்வு சிகிச்சை நிலையமானது காலை 6.30 மணியளவில் நடைபவனி நிகழ்வு ஒன்றினை சித்தங்கேணி சந்தியிலிருந்து மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை வளாகம் வரை முன்னெடுத்து சென்றது.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவரான பேராசிரியர் ராஜேந்திரா சுரேந்திரகுமரன் அவர்களும் வைத்தியர் பேதுருப்பிள்ளை அமல் தினேஷ் கூஞ்ஞே அவர்களும் சங்கானை பிரதேச செயலாளரான திருமதி கவிதா உருத்திரகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் சங்கானை இளைஞர் மன்ற உறுப்பினர்கள், சங்கானை பிரதேச செயலக ஊழியர்கள், GMH வைத்தியசாலை ஊழியர்கள், IMS நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் IMS மாணவர்களும் இந் நடை பவனியில் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வானது ” இயன்மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் இயன்மருத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டது “.
இம்முறை (கீழ்) முதுகு வலி மற்றும் அதற்கான இயன்மருத்துவ சிகிச்சை முறைகள் எனும் கருப்பொருளில் உலக இயன்மருத்துவதினம் வருகின்ற 8ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மானிப்பாய் நரம்பியல் புனர்வாழ்வு சிகிச்சை நிலையமானது 2014 ம் ஆண்டு முதல் 2024 ம் ஆண்டு வரை சுமார் 10 வருட காலங்களாக சிறந்த முறையில் இயன்மருத்துவ மற்றும் புனர்வாழ்வு சிகிச்சைகளை வழங்கி வருகின்றது.
Parade Live Link:Parade
:Parade 2
:parade 3